விஜய், சங்கீதா தம்பதியினரின் 21 ஆவது திருமண நாள் இன்று!

விஜய், சங்கீதா தம்பதியினரின் 21 ஆவது திருமண நாள் இன்று!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினரின் 21 ஆவது திருமண தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் இரசிகர்களை கொண்டு உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் விஜய் 1999ஆம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் குறித்த அறிவிப்புகள் அவ்வவ்போது வெளியாகி வரும் நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.