கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் தொற்று நோயியல் நிபுணர் கருத்து

கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் தொற்று நோயியல் நிபுணர் கருத்து

கொரோனா வைரஸ் பரவல் சமூகத்திற்குள் இருப்பது தொடர்பில் எந்தவொரு அறிக்கையும் இல்லாததன் காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் சிலவற்றை தளர்த்துவது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் அதிகளவான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.