நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திலிருந்து நாடு திரும்பிய இருவருக்கும், சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும், மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும், இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

அத்துடன் எகிப்தில் இருந்து இலங்கை வந்த இந்திய கடலோடி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,959 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2811 ஆக அதிகரித்துள்ளது.