அம்பாறையில் திடீரென படையெடுக்கும் பாம்புகள்! அச்சத்தில் மக்கள்

அம்பாறையில் திடீரென படையெடுக்கும் பாம்புகள்! அச்சத்தில் மக்கள்

அம்பாறை மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியேறி வசித்துவரும் கிராமங்களிலும் எல்லைக் கிராமங்களிலும் பாம்புத் தொல்லை அதிகரித்துள்ளதனால் பலர் பாம்புக்கடிக்கும் இலக்காகி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் சாகாமம், அலிகம்பை, சாந்திபுரம், தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடியாறு ஆகிய கிராமங்களில் திடீரென பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள மக்கள் பாம்புக்கடிக்கு இலக்காகி வருவதுடன் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது அதிகரித்த வெப்பம் காரணமாக பல இடங்களிலும் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களிலும் பாம்புகள் சுருண்டு கிடக்கின்றன. இதனால் வாகனங்களை எடுப்பவர்கள் நன்கு பரிசோதித்த பின்னரே வாகனங்களை ஓட்டுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிலவும் வெப்பத்தினால் பாம்பக்கடிக்கு இலக்காகுபவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியசாலைகளில் பாம்புக்கடிக்கு இலக்காகுபவர்கள் சிகிச்சை பெறவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன