
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் எதிர்ப்பு பேரணி..
வேலையற்ற பட்டதாரிகள் 51 ஆயிரத்து 135 பேருக்கான நியமன கடிதங்கள் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக பொது சேவை மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுர் ஆட்சி அமைச்சு தெரிவித்தது.
இதேவேளை , 9421 பேரின் விண்ணபங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்ப்பு பேரணியினை முன்னெடுத்தனர்.
இன்று காலை கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தின் முன் இருந்து ஜனாதிபதி காரியாலயம் வரை குறித்த ஆரப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.