அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

காவற்துறை போதை பொரள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுடன் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டயல் சமிந்த என்பவரின் வாகனங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச இராசயன பகுப்பாய்வு பிரிவுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் 6 வாகனங்கள் குறித்தே இவ்வாறு அறிக்கை சம்ர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்த வழக்கு இன்று மினுவங்கொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.