ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

ரஷ்யாவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதூங்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

இன்று காலை 9.30 மணிக்கு அவர் இவ்வாறு முன்னிலையாகியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை கட்டாய விடுமுறையில் உள்ள காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அமைச்சர் தலத்தா அத்துகோரல இன்று காலை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.