SPB-யின் தற்போதைய நிலை என்ன..? சரண் தெரிவித்துள்ள விடயம்

SPB-யின் தற்போதைய நிலை என்ன..? சரண் தெரிவித்துள்ள விடயம்

கடந்த 48 மணி நேரமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

SP.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீண்டும் நலமுடன் வர வேண்டும் என்று பிரபலங்கள், அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் பல்வேறு பிராத்தனைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் SPB-யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து SPB-யின் மகன் சரண் தமது சமூகவலைதளப் பக்கங்களில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் அனைவரது பிரார்த்தனையாலும் எஸ்பிபியின் உடல்நிலை கடந்த 48 மணிநேரமாக சீராக இருந்து வருகிறது.. அனைவரது பிரார்த்தனைக்கும் நன்றி" என தெரிவித்திருக்கிறார்.