இன்றைய ராசிபலன் 24/08/2020

இன்றைய ராசிபலன் 24/08/2020

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். எதிலும் ஏற்றம் பெறும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்:  சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாமர்த்தியமாக பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுகொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


மிதுனம்

மிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர் களை கண்டறிவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.


கடகம்

கடகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.


சிம்மம்

சிம்மம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.


கன்னி

கன்னி: மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.


துலாம்

துலாம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொண்டு செயல்படு வது நல்லது. வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான் மையும் வந்து செல்லும். பண விஷயங்களில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய  வந்து பேசுவார்கள். வியாபாரிகள் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.


மகரம்

மகரம்: நீண்ட நாள்  ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


கும்பம்

கும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நல்ல மாற்றம் ஏற்படும் நாள்.


மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில சூழ்நிலையை கற்று கொள்வீர்கள். இருப்பினும் நிதானம் தேவைப்படும் நாள்.