இன்று இடம்பெற்ற இறுதி கிரியைகள்..!
கொரானா வைரஸ் தொற்றுறுதியாகியிருந்த நிலையில் உயிரிழந்த 47 வயதுடைய பெண்ணின் இறுதி கிரியை இன்று இடம்பெற்றது.
கொட்டிகாவத்தை பொது மயானத்தில் அவரது இறுதியைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய குறித்த பெண் நேற்று நள்ளிரவு ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் உயிரிழந்தார்.
கடந்த 20 ஆம் திகதி சென்னையில் இருந்து நாடு திரும்பிய குறித்த பெண் இரணவில கொவிட் 19 சிகிச்சை மையத்தில் இருந்து ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த மாவத்தகம பகுதியை சேர்ந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.