எனது அனுமதி பெறப்பட வேண்டும் - தடை விதித்துள்ள அங்கஜன்

எனது அனுமதி பெறப்பட வேண்டும் - தடை விதித்துள்ள அங்கஜன்

யாழ். மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் எனது அனுமதியுடனேயே முன்னெடுக்க வேண்டுமென யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்த விபரங்களை தன்னிடம் தருமாறும் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் குறித்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அமைச்சுகளும் திணைக்களங்களும் அனுமதி வழங்கும் அனைத்து திட்டங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் எனது இணை அனுசரனையுடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.

யாழ் பிரதேச செயலகத்தில் பொருத்தமான அலுவலக இடமொன்றை ஒதுக்கித் தருமாறு பிரதேச செயலாளரை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.