
மின்சார சபை கட்டுப்பாட்டு மையத்திற்கு கண்கானிப்பு விஜயம்..!
நாடு தழுவிய ரீதியில் மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழு, இன்று பத்தரமுல்லை - பெலவத்தையிலுள்ள இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டு மையத்திற்கு கண்கானிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தது.
இதன் போது குழுவின் அதிகாரிகள் கட்டுப்பாட்டு மையத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற விதம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
குறித்த குழுவினால் தயாரிக்கப்படவுள்ள அறிக்கை நாளை மறுதினம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டளஸ் அழஹபெருமவிடம் சமர்பிக்கப்படவுள்ளது.