இது பழிவாங்கும் திட்டம் - யாழ் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

இது பழிவாங்கும் திட்டம் - யாழ் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

யாழில் முச்சக்கர வண்டியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தினை கொடுக்காது தனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

நேற்றைய தினம் யாழ். நகரப் பகுதியில் சிவில் உடையில் பயணித்த குறித்த பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதியான தனது கணவனை தாக்கி கைது செய்துள்ளதாக தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சிவில் உடையில் நின்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி யாழ். பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதேவேளை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி தெரிவிக்கப்பட்டது.

அதனை மறுத்து இதுவொரு பழிவாங்கும் திட்டம் என பாதிக்கப்பட்டவரின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.