நடந்த கல்யாணத்தை நிறுத்த செல்லும் சந்தானம்.... வைரலாகும் டிக்கிலோனா
காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம், டிக்கிலோனா டிரைலரில் நடந்த கல்யாணத்தை நிறுத்த செல்கிறார்.
Here is the trailer of my next - #Dikkiloona where I play Triple Witty roles😜
— Santhanam (@iamsanthanam) August 21, 2020
Get ready to Time-Travel😍https://t.co/oLRinwuQxZ#DikkiloonaTrailer @thisisysr @karthikyogitw @kjr_studios @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin @SonyMusicSouth
சந்தானம்
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இதில், டைம் மிஷின் மூலம் 2027ல் இருந்து 2020 ஆம் ஆண்டுக்கு செல்லும் சந்தானம், அப்போது நடக்க இருக்கும் கல்யாணத்தை தடுத்து நிறுத்த செல்வதாக டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியில் சந்தானம் மூன்று கெட்டப்புகளில் ஒரே காட்சியில் தோன்றுவது போல் காட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.