
இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு -கிளிநொச்சியில் இளம் குடும்பபெண் கைது
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய கஞ்சாபொதியுடன் இளம் குடும்ப பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி இரணைமடு விமானப்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, கிளிநொச்சி புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி குறித்த தகவலை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனை அடுத்து அவரது வழிநடத்தலில் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பதில் கடமை பொறுப்பதிகாரி சம்பிக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த கஞ்சா பொதியும், அதனை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக இளம் குடும்ப பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை விமானப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புடன் பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.