பொது தேர்தலுக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு
பொது தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வந்த நிலையில் இந்த வாரம் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 05ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.