
முடிவுக்கு வருகிறது தேரர்களின் இழுபறி! தேர்தல் ஆணைக்குழு எடுக்கவுள்ள முடிவு
எங்கள் சக்தி மக்கள் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த தகவலை எங்கள் சக்தி மக்கள் கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிலைக்கு கலகொடஅத்தே ஞானசார தேரரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தபோதும் எங்கள் சக்தி மக்கள் கட்சியின் செயலாளர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரர், தம்மை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரைத்து தேர்தல் ஆணைக்குழுவில் கடிதம் ஒன்றை ஏற்கனவே கையளித்துள்ளார்.
எனினும் கட்சியின் மத்திய செயற்குழுவில் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமிப்பதாக எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்க வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் கையளித்த கடிதம் செல்லுபடியாகாது என்று எங்கள் சக்தி மக்கள் கட்சியினர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.