கல்கத்தா இந்து- முஸ்லிம் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்ட நாள்: 19-8-1946

கல்கத்தா இந்து- முஸ்லிம் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்ட நாள்: 19-8-1946

1946-ம் ஆண்டு இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் கோரிக்கை கொல்கத்தா (அப்போது கல்கத்தா)வில் வலுபெற்றது. இதன் காரணமாக மதக்கலவரம் ஏறபட்டது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் பெரும்பாலான இஸ்லாமியர் கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றனர். இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1862- மினசோட்டாவில் லகோட்டா பழங்குடியினர்

 

1946-ம் ஆண்டு இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் கோரிக்கை கொல்கத்தா (அப்போது கல்கத்தா)வில் வலுபெற்றது. இதன் காரணமாக மதக்கலவரம் ஏறபட்டது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் பெரும்பாலான இஸ்லாமியர் கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றனர்.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1862- மினசோட்டாவில் லகோட்டா பழங்குடியினர் நியூ ஊல்ம் குடியேற்றத்திட்டத்தைத் தாக்கி பல வெள்ள்ளையர்களைக் கொன்றனர்.

* 1895- கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.

* 1915- முதலாம் உலகப் போர்: ஒட்டோமான் பேரரசுப் படைகளுக்கெதிராகஆர்மீனியர்கள் தாக்குதலைத் தொடுத்தனர்.

* 1919- பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.

* 1934- ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9 சதவித மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

* 1944- இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிஸ் தாக்குதலைத் தொடுத்தது.

* 1945- ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியெட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.

*  1953 - பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

* 1960- சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.

*  1980- சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டு 301 பேர் பலியானார்கள்.

* 1991 - ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா என்ற சுற்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும்போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

*  2002 - ரஷ்யாவின் எம்.ஐ.-26 ரக விமானத்தை செச்சினியத் தீவிரவாதிகளின் ஏவுகணையால் தாக்கப்பட்டதில் 118 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிறப்பு

* 1918- சங்கர் தயாள் சர்மா, இந்தியாவின் 9-வது குடியரசுத் தலைவர்

* 1929 - ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர்

* 1931 ஜி. கே. மூப்பனார் தமிழக காங்கிரஸ் தலைவர்

* 1946 - பில் கிளின்டன், ஐக்கிய அமெரிக்காவின் 42-வது குடியரசுத் தலைவர்