ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது பொது விடுமுறை நாட்களில் தேர்தல் இடம்பெறாது – மஹிந்த தேசப்பிரிய

ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது பொது விடுமுறை நாட்களில் தேர்தல் இடம்பெறாது – மஹிந்த தேசப்பிரிய

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 4 முதல் 19 ஆம் திகதிக்குள் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் திகதியைத் தேர்ந்தெடுப்பதற்காக மூன்று ஆணைக்குழு உறுப்பினர்களிடையே இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த அவர், “ஓகஸ்ட் 4 முதல் ஓகஸ்ட் 19 வரை எந்த நாளிலும் தேர்தல் திகதி குறித்து முடிவு எட்டப்படலாம் என இப்போது கூறலாம், ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது பொது விடுமுறை நாட்களில் தேர்தல் இடம்பெறாது” என அவர் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பொதுத் தேர்தல் திகதி குறித்த முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.