
சர்வதேச ரீதியாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் முன்னிலைக்கு வந்தது ஸ்ரீலங்கா!
உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளிகள் வேகமாக குணமடையும் நாடுகளில் இலங்கை முன்னணி உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை, உலகின் மிக முக்கிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை 56.86 வீதத்தில் உள்ளது.
உலகில் அதிக கொரோனா மரணங்களை பதிவு செய்த அமெரிக்காவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் நூற்றுக்கு 38.56 வீதத்திலும், பிரேசிலில் 43.88 வீதத்திலும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.