
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 305 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 305 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அதற்கமைய ஜோர்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பணிபுரியும் 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, ஜோர்தானின், அம்மானிலிருந்து இலங்கை எயர்லைன்ஸ் நிறுவன விமானம் மூலமாக 285 இலங்கையர்கள் இன்று அதிகாலை 4.35 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரையில் அவர்கள் அனைவரையும் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.