புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு

புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு

புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார, வணிக, ஆளுமை, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளுக்கும் அவர் இதன்போது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் பொருளாதார மீட்சி தற்போது முக்கியமானதாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.