யாசகரின் வங்கிக்கணக்கில் மில்லியன் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்

யாசகரின் வங்கிக்கணக்கில் மில்லியன் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்

யாசகத்தில் ஈடுபடும் நபரொருவரின் வங்கி கணக்கில் 140 மில்லியன் ரூபாய் வைப்பில் உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரத்மலான பிரதேசத்தில் யாசகத்தில் ஈடுபடும் 65 வயதான யாசகரின் வங்கிக் கணக்கிலேயே இந்த தொகை வைப்பிலிடப்பட்டுள்ளது.இவர் போதைக்கு அடிமையானவர் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான மேர்வின் ஜனா என்பவரால் சம்பாதிக்கப்பட்ட பணமே, குறித்த யாசகரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போதை வர்த்தகர், பூஸா சிறையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்தேகநபர் கடந்த காலங்களில் இவ்வாறான பாரியளவு பணத்தை, பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகள் ஊடாக வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, ​மேர்வின் ஜனாவின் மனைவி, சகோதரி உள்ளிட்டவர்கள் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நிலையில், பல தடவைகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர்கள் என்றும் இவர்களின் வங்கிக் கணக்குகளில் 370 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.