அமெரிக்காவில் ஆயிரம் தீவுகள் பாலம் திறந்து வைக்கப்பட்டது (ஆக.18, 1938)

அமெரிக்காவில் ஆயிரம் தீவுகள் பாலம் திறந்து வைக்கப்பட்டது (ஆக.18, 1938)

அமெரிக்காவில் உள்ள வடக்கு நியூயார்க் நகரத்தையும், கனடா நாட்டில் உள்ள ஒண்டாரியோ நகரத்தையும் இணைக்கும் விதமாக புனித லாரன்ஸ் ஆற்றின் மேலே கட்டப்பட்டுள்ள சர்வதேச பாலம் ஆயிரம் தீவுகள் பாலமாகும். 1937-ம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கப்பட்டன. பின்னாளில் 1959-ஆம் ஆண்டு இந்த பாலம் விரிவாக்கம் செய்யப்பட்டது. கனடா-அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள ஆயிரம் தீவுகள் பகுதியை கடந்து இந்த பாலம் செல்வதால் இதற்கு ஆயிரம் தீவுகள் பாலம் என பெயர் சூட்டப்பட்டது.

 

அமெரிக்காவில் உள்ள வடக்கு நியூயார்க் நகரத்தையும், கனடா நாட்டில் உள்ள ஒண்டாரியோ நகரத்தையும் இணைக்கும் விதமாக புனித லாரன்ஸ் ஆற்றின் மேலே கட்டப்பட்டுள்ள சர்வதேச பாலம் ஆயிரம் தீவுகள் பாலமாகும்.

1937-ம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கப்பட்டன. பின்னாளில் 1959-ஆம் ஆண்டு இந்த பாலம் விரிவாக்கம் செய்யப்பட்டது. கனடா-அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள ஆயிரம் தீவுகள் பகுதியை கடந்து இந்த பாலம் செல்வதால் இதற்கு ஆயிரம் தீவுகள் பாலம் என பெயர் சூட்டப்பட்டது.

 


பாலத்தின் இருபுறமும் தனித்தனியாக வாகனப் போக்குவரத்துக்கென பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பாதசாரிகள் நடந்து போகவும், இரு பக்கங்களிலும் வசதியான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

5 பாலங்களை ஒன்றிணைத்து 13.7 கி.மீ. நீளமுள்ள ஆயிரம் தீவுகள் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கட்டி முடிக்க 16 மாதங்கள் ஆகின. சுமார் 3 கோடி டாலர் செலவிடப்பட்டது. 1938-ஆம் ஆண்டு இதே நாளில் இந்த பாலத்தை அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் திறந்து வைத்தார்.

ஆரம்பக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் வாகனங்கள் மட்டுமே இந்த பாலத்தின் வழியே சென்று வந்தன. தற்போது, 2 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இப்பாதை வழியே சென்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.