முடிவுகட்ட வேண்டும் - வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் சீற்றம்
ஸ்ரீலங்கா அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்கவேண்டும் என்று முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
19 ஆவது திருத்தமானது ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் ஆட்சியிலிருக்கும் அரசையும் சாய்த்து வீழ்த்தி விடும் நிலையை ஏற்படுத்தியது.
19ஆவது திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல.
ஆனால் அதனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம் தான் என்று நாட்டில் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.