யாழில் குத்தகைப் பணம் செலுத்தாத ஒரு பிரதேச சபைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த காணி உரிமையாளர்

யாழில் குத்தகைப் பணம் செலுத்தாத ஒரு பிரதேச சபைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த காணி உரிமையாளர்

மூன்று வருடங்களுக்கு மேலாக சந்தைக்குரிய குத்தகைப் பணத்தை உரிய காலத்தில் செலுத்தாமல் காலம் கடத்தி வந்தமையால் காணியை உடனடியாக விடுமாறு உரிமையாளர் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்

குறிப்பிட்ட தினங்களுக்குள் காணியை விட தவறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காணி உரிமையாளர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வலி. தென்மேற்கு பிரதேசத்தில் பண்டத்தரிப்பு பட்டினத்தில் 5 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் நெடுநாள் கோரிக்கைகளைத் தொடர்ந்து சாந்தை கிராமத்தில் தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான காணியை மாதாந்தம் ரூபா 1000 வீதம் குத்தகைக்குப் பெற்று கொண்ட பிரதேச சபை அக்காணியில் மரக்கறிச் சந்தை, கடல் உணவுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றை அமைத்திருந்தது.

இதனால் அக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பயனடைந்துவந்தனர்.

இந்நிலையில் காணிக்குரிய குத்தகைப் பணத்தை மூன்று வருடங்களுக்கு மேலாக செலுத்தாமல் காலம் கடத்தி வந்தமையால் விரக்தியடைந்த காணி உரிமையாளர் காணியை உடனடியாக விடுமாறும் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதேச சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.