அரிசிப் பொதிக்குள் இறந்த எலியின் உடற்பாகங்கள்!

அரிசிப் பொதிக்குள் இறந்த எலியின் உடற்பாகங்கள்!

கேகாலை மாவட்டம் - ஹெம் மாதகம பிரதேசத்தில் வீட்டு உணவுக்காக கொண்டுவரப்பட் அரிசி பொதியில் இறந்த எலி ஒன்றின் உடற்பாகங்களும், கொசுக்களின் எச்சங்களும் காணப்பட்ட சம்பவமொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது.

ஹெம்மாதகம அம்பலம 100 ஏக்கர் பிரதேசத்தில் வசித்து வரும் எம். ஜீ.பிரசன்ன என்பவராவார். அரிசிப் பொதியை வியாபார நிலையத்திலிருந்து எடுத்து வந்த போது அதில் வித்தியாசமான வாடை வீசவே அதனை வெட்டி பார்த்துள்ளார்.

அதனுள் இந்த எலியின் எச்சங்களும் கொசுக்களின் எச்சங்களும் காணப்பட்டுள்ளன. உடனடியாக அவர் அரிசி பொதியைக் கொள்வனவு செய்த வியாபார நிறுவனத்திற்கும் அரிசி உற்பத்தி நிறுவனத்திற்கும் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதுடன் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.

இதற்கிணங்க பிரதேச பொது சுகாதார உத்தியோகத்தர்கள் அவற்றை தடயப் பொருட்களாக வைத்து உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இவ்விடயமாக தனக்கு ஏற்பட்ட சங்கடமான சூழ்நிலையை இவ்விடயத்திற்கு முகம் கொடுத்த வாடிக்கையாளர் அதிகாரிகளுக்கு நேற்று வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.