
சட்டவிராதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது
பொகவந்தலாவ கொட்டயாகலை தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களும் பொகவந்தலாவ லொய்னோன் தோட்டத்தில் இருந்து உற்றெடுத்து செல்லும் ஆறு ஒன்றில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் உள்ளடங்களாக ஏழு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில் கொட்டியாகலை பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப்பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட ஏழு பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு எதிர்வரும் செவ்வாய் கிழமை ஹட்டன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.