முதல் முதலாக முக்கிய வேடத்தில் நடிக்கும் செல்வராகவன்: ஹீரோயினாக முன்னணி நாயகி!

முதல் முதலாக முக்கிய வேடத்தில் நடிக்கும் செல்வராகவன்: ஹீரோயினாக முன்னணி நாயகி!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பட்டியலில் இடம்பெற்றுள்ள செல்வராகவன் இதுவரை அவர் இயக்கிய படங்களில் கூட தலை காட்டியது இல்லை. ஆனால் தற்போது ஒரு திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ்தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ’சாணி காயிதம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ’ராக்கி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சாணி காயிதம்’ படத்தின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் செல்வராகவன் கையில் ரத்தக்கரையுள்ள கத்தியும், கீர்த்திசுரேஷ் கையில் துப்பாக்கியும் உள்ளது போன்றும், அவர்கள் எதிரே ஒரு வாகனம் வந்து கொண்டிருப்பது போன்றும் உள்ளது. முதல் முதலாக பிரபல இயக்குனர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.