நடுக்கடலில் வைத்து சிறுவன் சித்திரவதை; சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
மாத்தறை, மிரிசவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை 48 நாட்கள் நடுக்கடலில் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வறுமை காரணமாக 17 வயதுடைய ஷெஹான் என்ற சிறுவன் கடற்றொழிலாளர்களுடன் சேர்ந்து தொழிலுக்கு சென்றுள்ளார்.
எனினும் அவர் 48 நாட்களின் பின்னர் உடல் ஆரோக்கியமற்ற நிலையில் சித்திரவதைகளுடன் வீடு திரும்பியுள்ளார்.
தொழிலில் ஈடுபட்டிருந்த போது தற்செயலாக ஒரு மீனை கடலுக்குள் இறக்கிவிட்டதற்காக மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை அவர் எதிர்கொண்டுள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஷெஹான் மீது சக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் சித்திரவதைகளை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு மாத காலப்பகுதியில் அவருக்கு சரியாக உணவளிக்கப்படவில்லை. அவர் அதிகமாக சாப்பிட்டதாக குற்றம் சாட்டிய பின்னர் சக பணியாளர்கள் அவரது வாயின் பக்கங்களை வெட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.