அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்கிறதா? – பிரதமர் விளக்கம்
அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்கின்றது என எதிர்கட்சியினர் தெரிவிப்பது தீயநோக்கத்துடனான பொய் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரம் குித்து கதைப்பவர்கள் உண்மையில் அறிவற்றவர்கள் எனவும் தாங்கள் ஒருபோதும் சர்வாதிகாரிகளாக இருந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின்போதே சர்வாதிகார போக்குகள் காணப்பட்டன என்றும் தலைவர்கள் தாங்கள் விரும்பிய விதத்தில் நடந்துகொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் யுத்தவீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்கள் நலனுக்கு ஏற்றவிதத்தில் சட்டங்களை இயற்றியதுடன், தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றும் மக்களின் உணர்வுகளை முற்றாக புறக்கணித்தார்கள் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.