
முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொதுமக்கள் பார்வைகூடத்துக்கு பூட்டு
இலங்கையில் பொதுத்தேர்தலினை தொடர்ந்து நடைபெறவுள்ள முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பொதுமக்கள் பார்வைகூடம் திறக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெலவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பொதுமக்களை நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்க தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள், தற்போது இணைய முறைமை ஊடாக தங்களது சுய தகவல்களை வழங்கியுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.