பெரும்பான்மையை சரியாக பயன்படுத்த வேண்டும் - பசில் ராஜபக்ஷ விசேட அறிக்கை!

பெரும்பான்மையை சரியாக பயன்படுத்த வேண்டும் - பசில் ராஜபக்ஷ விசேட அறிக்கை!

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் கூடிய மக்களால் வழங்கப்பட்ட மகத்தான ஆணை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் திட்டமிடல் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை செயற்படுத்துவதற்கு மகத்தான மக்கள் ஆணையை பெற்றுக்கொடுத்த பொதுமக்கள் இந்நாட்டு அபிவிருத்தியில் தெளிவான மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மனித வளத்தை நிர்வகிக்க வேண்டும். விசேடமாக தொழிலாளர்களை மையப்படுத்தி இந்நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

அபிவிருத்தி உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது, ஆனால் மக்களின் பங்களிப்புடன் ஒரு விரிவான அபிவிருத்தி செயற்பாட்டை நோக்கி செல்ல வேண்டும் எனவும்,

இது பல்வேறு அரச நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து தேவையான திட்டங்களை வகுக்கவும், அதற்கு அவசியமான தரவுகளை சேகரித்து நிகழ்கால மற்றும் எதிர்கால தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடிய தரவு சேமிப்பு மையத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.