டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் காவல்துறை தடுப்பில் கொல்லப்பட்டுள்ளமைக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

இங்கிலாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

 

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதனை தொடர்ந்து அந்த நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

 

இதன்போது  காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளன.


இதில் பல காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன் காவல்துறை நிலையங்களுக்கும், வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


வொஷிங்டனில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை மீறி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தநிலையில் வெள்ளை மாளிகையை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் 70 இற்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரை பயன்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.