பிக்பொஸ் 4 குறித்த அறிவிப்பு வெளியானது!
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு உள்ள நிலையில் கொரோனா தொற்று பரவலை அடுத்து இந்த நிகழ்ச்சியை ஆரம்பிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டது.
அத்துடன் பல மொழிகளில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்சியை தெலுங்கில் ஆரம்பிப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், தமிழிலும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.