ஆலயங்களுக்கு நுழைய முடியாத நெருக்கடியில் ராஜபக்ச குடும்பம்! பின்னணி குறித்து வெளியான தகவல்

ஆலயங்களுக்கு நுழைய முடியாத நெருக்கடியில் ராஜபக்ச குடும்பம்! பின்னணி குறித்து வெளியான தகவல்

ராஜபக்ச குடும்பத்தினரின் மத ரீதியான ஆசீர்வாதங்களுக்கு பாரிய சிக்கல் ஏற்படக்கூடும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அனுராதபுரம் புனித நகரத்திற்குள் கோவில் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வரும் குழுவினரால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாகத் தேர்தல்களை இலக்காக கொண்டு அந்த காலப்பகுதிகளில் ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இந்தியாவின் திருப்பதி கோவிலுக்குச் சென்று ஆசீர்வாதம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

நெருக்கடியில் ராஜபக்ச குடும்பம்

மகிந்த, பசில் மற்றும் கோட்டாபய ஆகிய ராஜபக்ச குடும்பத்தினர் மட்டுமன்றி, ரணில் விக்கிரமசிங்க கூட இந்தியாவிலுள்ள கோவில்களுக்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

ஆலயங்களுக்கு நுழைய முடியாத நெருக்கடியில் ராஜபக்ச குடும்பம்! பின்னணி குறித்து வெளியான தகவல் | Rajpaksa Families New Struggle

இவ்வாறானதொரு பின்னணியில், ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான குழுவொன்று இந்துக் கோவில்கள் தொடர்பில் ஏதோவொரு வகையில் எதிர்ப்பை உருவாக்கி வருகின்றனர்.

இதனால் ராஜபக்ச குடும்பத்தினரால் கோயில்களுக்கு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை குறித்து விமர்சகர்கள் அவதானத்தைச் செலுத்தியுள்ளனர்.

அனுராதபுரத்தில் இந்திய அரசாங்கத்தின் அனுசரனையுடன் ஆலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சியினால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.