நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று

டிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

 

இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நிக்கி கல்ராணி தனது 

டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’கடந்த வாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. நான் இப்போது குணமடைந்து வருகிறேன். 

 

எனது கவனித்துக்கொண்ட நெருங்கிய சொந்தங்களுக்கும்,

முன்கள சுகாதார ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தொடர்ந்து ஆதரவளித்த சென்னை மாநகராட்சிக்கு

எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.