பிறந்த நாளில் ரசிகர்களிடம் 'சாரி' கேட்ட சாயிஷா!
தமிழ் சினிமாவின் நாயகிகளில் ஒருவரான சாயிஷா, பிரபல நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தற்போது ஆர்யாவுடன் ’டெடி’ என்ற படத்தில் மட்டுமே நடித்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று தனது பிறந்த நாளை சாயிஷா கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை குவித்தனர். இதனையடுத்து இன்று அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த பிறந்தநாள் உண்மையிலேயே எனக்கு மிகவும் மிகச்சிறந்த பிறந்தநாள். என்னை வாழ்த்துவதற்காக நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் மிகவும் நன்றி. இந்த நாளை நான் மிகவும் சிறப்பான நாளாக கருதுகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் நான் இங்கே இருக்க முடியாது. ரசிகர்களின் ஒவ்வொரு வாழ்த்திற்கும் என்னால் பதிலளிக்க முடியவில்லை என்பதற்காக ’சாரி’ என்று சாயிஷா அந்த டுவிட்டில் பதிவு செய்துள்ளார். சாயிஷாவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.