
சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதே எனது நோக்கம் – தினேஸ்
வலுவான வெளிநாட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தி, சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதே தனது இலக்கு என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு நாட்டின் நற்பெயரை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது அவசியமாகும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அமைச்சர்கள் பலரும் இன்று உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.