உலகக்கிண்ணம் 2021- இலங்கை மற்றும் UAE ஆகிய நாடுகள் மேலதிக தெரிவு

உலகக்கிண்ணம் 2021- இலங்கை மற்றும் UAE ஆகிய நாடுகள் மேலதிக தெரிவு

கொவிட்-19 காரணமாக 2021 ஆம் ஆண்டு இந்தியாவால் 20 க்கு 20 ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கட் தொடரை நடத்த முடியாமல் போனால், இலங்கையும், ஐக்கிய அரபு இராச்சியமும் மேலதிக தெரிவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த உலகக் கிண்ண 20 க்கு 20 கிரிக்கட் தொடர் கொவிட்-19 காரணமாக 2022 ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இதேநேரம், அடுத்த ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடரை நடத்தும் உரிமம், சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சர்வதேச ரீதியில் கொவிட்-19 காரணமாக அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் 20 க்கு 20 உலகக் கிண்ண தொடரை நடத்த முடியாமல் போனால், மேலதிக தெரிவாக இலங்கையும் ஐக்கிய இராச்சியமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எந்தவொரு உலகளாவிய நிகழ்வுக்கும் மேலதிக தெரிவை பட்டியலிடுவது ஒரு நிலையான நெறிமுறை என்பதற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.