யாழில் சமுர்த்தி உதவிக்கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு
கொரோனா காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமுர்த்தி உதவிக்கொடுப்பனவுகள் யாழ்.மாவட்டத்தில் முதலாம் கட்டமாக 1 லட்சத்து, 35 ஆயிரம் 113 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் ரி.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக் காலப்பகுதியில் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு வேளைகளில் அரசாங்கத்தின் உத்தரவிற்கமைய, சமுர்த்தி வேலைத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான உதவித் தொகைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், யாழ்.மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
அந்தவகையில், இரண்டாம் கட்டமாக அந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 113 குடும்பங்களில், இன்று வரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 139 குடும்பங்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், 99.28 வீதமாகும். ஏனைய பயனாளிக்கும் நாளை இந்த கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.