தியாக தீபத்தின் நான்காம் நாள் நினைவேந்தல்

தியாக தீபத்தின் நான்காம் நாள் நினைவேந்தல்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது.

அதன் போது மாவீரர் டிஸ்க்கோவின் தந்தை மருதம் முத்துலிங்கம் ஈகை சுடரினை ஏற்றியதை தொடர்ந்து , தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.