நீர் முற்றாக வற்றச் செய்யப்படவுள்ள பொல்கொல்ல நீர்த்தேக்கம்: வெளியான அறிவிப்பு
செப்டம்பர் 25 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முற்றாக வற்றச் செய்யப்படும் என நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
எல் நினோ (El Niño) காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நீர்த்தேக்கத்தின் மதகுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு இரண்டரை நாட்களுக்கு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.
எல் நினோ
இதனால், பொல்கொல்ல மற்றும் பாலகொல்ல ஆகிய பகுதிகளிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
