கோர விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை பலி!
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், பாலமுனைப் பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில், பாலமுனையைப் பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை - 08, அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட 4 பிள்ளைகளின் தந்தையான அப்துல் சமது முபாரிஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.