தங்க விலையில் திடீர் மாற்றம்...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.09.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சந்தை நிலவரங்களின்படி, நேற்றுடன் (10) ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 4,000 ரூபா குறைந்துள்ளது.
தங்க விலை
இதன்படி, இன்று (11) காலை 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 343,200 ரூபாவாகக் குறைந்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் இதன் விலை 347,000 ரூபாவாக இருந்துள்ளது.
அதேவேளை, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று 377,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 373,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.