2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

 

மதிப்பீட்டுப் பணிகள்

இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு | 2026 A L Results To Be Released Before Year End

அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றைய தினத்துடன் (05) நிறைவடைந்தன.

இந்தமுறை நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.