இன்றைய ராசி பலன் 5 செப்டம்பர் 2026
மேஷம் ராசி பலன்
![]()
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலை, தொழில் சார்ந்த பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. மேலும் அது தொடர்பான திட்டங்கள் வெற்றியடையும். உங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் முன் முயற்சிகள் ஏற்றம் தரக் கூடியதாக இருக்கும். அதே சமயம் அவசரம் முடிவுகளை எடுக்காமல் நிதானத்தையும் கடைபிடிக்கவும். புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பெரிய அளவில் சாதகமாக அமையும். உறவுகள் தொடர்பாக உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். ஆரோக்கியம் மேம்படும் ஆற்றல் நிறைந்தவராக உணர்வீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
![]()
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதிநிலை மற்றும் செலவுகள் தொடர்பாக கவனமாக இருக்கவும். புதிய செலவுகளை தவிர்த்து, சேமிப்பு விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். பணியிடத்தை உங்களுடைய திட்டமிட்ட செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படலாம். இது உங்கள் பொறுமையை சோதிக்க வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். குடும்பம் தொடர்பான விஷயங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். சிலருக்கு தொண்டை வறட்சி அல்லது பல் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படும்.எதிலும் சரியான நிதி திட்டமிடல் தேவைப்படும்.
மிதுனம் ராசி பலன்
![]()
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி அதிகரிக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகள், இனிய பேச்சுகள் மூலம் பிறரை ஏற்க முடியும். சேமிப்பு, முதலீடு தொடர்பான கலந்துரையாடல்கள் நல்ல பலனை தரும். இது தொடர்பான விஷயங்கள் இன்று உங்கள் துணையுடன் நெருக்கத்தை அதிகரிக்கும். உங்களுடைய உடல் மற்றும் மனம் ஆற்றலுடன் உணர்வீர்கள். எதிலும் ஊக்கத்துடன் செயல்படுகிறது.உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்
கடகம் ராசி பலன்
![]()
கடக ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். சிறிய தாமதங்கள் கூட உங்களுக்கு சிக்கலை தர வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் எந்தவித வதந்திகள் அல்லது தேவையற்ற மோதல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இன்று உங்களுடைய நிலுவைத் தொகை அல்லது செலவுகள் தொடர்பாக கவனம் செலுத்தவும். காதல் தொடர்பான விஷயத்தில் வழக்கத்தை விட அதிக தனிமையை உணர்வீர்கள். இன்று அதிக மன சோர்வு ஏற்படும்.பயணங்கள் செல்வது தொடர்பாக திட்டமிடுபவர்கள்.
சிம்மம் ராசி பலன்
![]()
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வியாபாரம் அல்லது தொழில் முறை தொடர்புகள் வளரும். நிதி ஆதாயங்கள் வலுவடைய வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முந்தைய முயற்சிகளில் இருந்து நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய பணம் புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும். இன்று திருமண உறவில் காதல் நிறைந்திருக்கும். சுவாரஸ்யமான சில நல்ல விஷயங்கள் நடக்கும். இன்று உங்களுடைய உடல் நலம் மேம்படு. வேலைப்பளு குறைய வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி பலன்
![]()
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று இன்று உங்களுடைய வேலை, தொழில் தொடர்பாக அதிகாரம் அதிகரிக்கும். உங்களுடைய திறமையால் உங்களுடைய பொறுப்புக்களை சரியாக நிறைவேற்ற முடியும். முக்கிய ஒப்பந்தங்கள் அல்லது திட்டங்கள் தொடர்பாக மும்முறமாக செயல்படுவீர்கள். வேலைப்பட காரணமாக காதல், உறவுகள் காக நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்படும். மேலும் சிலருக்கு முதுகு தொடர்பான வலி பிரச்சனைகள் ஏற்படலாம்.நாள் முழுவதும் சற்று அசௌகரியமாக உணர்வீர்கள்.
துலாம் ராசி பலன்
![]()
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உயர்கல்வி அல்லது வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய லட்சிய திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். கல்வி மற்றும் சட்டம் தொடர்பான திட்டங்களை நிறைவேற சாதகமான நாள். முக்கிய நிதி முடிவுகள் எடுப்பதற்கு முன் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது நன்மை தரும். உங்கள் காதல் உறவில் அர்த்தமுள்ள உரையாடல்கள் இருக்கும். இலகுவான யோகா, உடற்பயிற்சிகள் உங்களுடைய மனம் உடல் நலனை மேம்படுத்துங்கள்.
விருச்சிகம் ராசி பலன்
![]()
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலை, நிதிநிலை, திட்டங்கள் தொடர்பாக ரகசியங்களை யாரிடம் வெளிப்படுத்த வேண்டாம். நாளும் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் சரியான திட்டமிடலுடன் செயல்படுவது அவசியம். இன்று தேவையற்ற கடன் வாங்குவது, செலவுகளை எதிர்த்து நல்லது. நிதிநிலை தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று உறவுகளை கவனமாக அனுப்பவும்.. உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். துணையின் உணர்வுகளை புரிந்து செயல்பட முடியும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தெளிவு உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
தனுசு ராசி பலன்
![]()
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்தவித கூட்டு முயற்சி நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும். மேலும் நிதிநிலை சார்ந்த விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்லவும். வணிகம் தொடர்பாக நீண்ட காலம் முடிவுகள் எடுத்து செயல்படவும். இன்று உற்சாக மனநிலையில் செலவுகள் செய்வது அல்லது முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.இன்று சமரசத்தால் உங்களுடைய உறவுகள் பல அமையும். பத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். இன்று மாலை நேரத்தில் மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
மகரம் ராசி பலன்
![]()
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை மற்றும் நிதிநிலை தொடர்பான விஷயங்களில் ஒழுக்கத்தை கடைபிடிக்கவும். குறுகிய கால சிக்கலை தீர்க்க, புதிய நிதி முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். வரவு செலவு தொடர்பாக பட்ஜெட் போட்டு செயல்படவும். காதல் தொடர்பாக உங்களுடைய வார்த்தைகளை விட செயல்கள் மூலம் உங்கள் அன்பை காட்டவும். துணை உணர்வுகளை கவனிக்கவும். இன்று த்தை ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நாள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
கும்பம் ராசி பலன்
![]()
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பான வாழ்க்கையை புதிய ஆற்றலுடன் செயல்படுவீர்கள். உங்கள் வேலையை செய்து முடிக்க நிர்வாக திட்டங்கள் தேவைப்படும். நிதி அபாயங்கள் ஏற்படுத்தும் முதலீடுகளின் ஈடுபட வேண்டாம். இன்று உங்களுடைய படைப்பாற்றல் வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு. காதல் தொடர்பாக புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்களுக்கு பிடித்தமான சில நபர்களை சந்திக்கலாம். உடல் நலம் வலிமையாக உணர்வீர்கள்.உங்கள் ஆற்றலை சரியான விஷயங்களுக்காக பயன்படுத்தவும்.
மீனம் ராசி பலன்
![]()
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதிநிலை தொடர்பான அடித்தளத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பணிகளை சரியான நேரத்தில் முடிப்பது, உற்பத்தி திறனை அதிகரிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி உள்ளீர்கள். பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களில் தவிர்க்கவும். உங்களுடைய வீட்டின் வசதி வாய்ப்புகள் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். இன்று ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளவும். குடும்ப விஷயங்கள் தொடர்பாக சிறிய கருத்து வேறுபாடுகள் கூட பெரிய பிரச்சினை ஆக மாறுவதை தவிர்க்கவும்.