தென்னாபிரிக்க பெண் கைது
வீசா காலாவதியான நிலையில், இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தென்னாபிரிக்க பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (11) கல்கிஸ்ஸை, பரம தம்ம சேதிய பிரதேசத்தில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.