ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பிரச்சினைக்கு தீர்வு..? (காணொளி)
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலுக்கான வேட்பாளர்கள் தெரிவு இடம்பெற்று நிறைவடைந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து தேசியப் பட்டியல் தெரிவு தொடர்பான இறுதித் தீர்மானம் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் ஊடாக 7 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.