
தனக்குத்தானே வெடிவைத்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர்!
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம் - துணுக்காய் வீதியைச் சேர்ந்த, 37 வயதுடைய - இரகுநாதன் கௌரிதரன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் இடியன் எனப்படும் துப்பாக்கியினால் தனக்குத்தானே வெடி வைத்து உயிரை மாய்த்துள்ளார்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக விரக்தியுற்ற குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.